ஒரு சில கவிதைகள் பெரிய வார்த்தை பிரயோகங்கள் இல்லாவிட்டாலும் கூட மனதை கவர்ந்து விடுகின்றன. அந்த வகையில் ராகவன் என்பவரின் கவிதை ஒன்றை அவரின் தளத்தில்(http://koodalkoothan.blogspot.in) கண்டேன்.
எந்த விளக்கமும் தேவைபடாத எல்லோருக்கும் புரியும்படியான கவிதைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் தான். ஒருவனின் பயத்தை அழகுத்தமிழில் அவர் சொல்லியிருக்கும் விதம் மெச்சும்படி இருக்கிறது.
உங்களுக்காக அவரின் கவிதையை இங்கே பகிர்கிறேன்.
ஏதோ பேசிக் கொண்டே வந்தஇரண்டு பேர்கள் கடக்க
ஆரம்பித்தார்கள்
நானும் சேர்ந்து கொண்டால்
பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம்
அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம்
மறுபடி காத்திருந்தேன்
அவர்கள் என்னை வேடிக்கையாய்
பார்த்து கடந்து சென்றார்கள்
இப்போது பாலத்தில் யாருமில்லை
தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது
திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து
வேற்று வழி இருக்கா என்று
விசாரிக்க ஆரம்பித்தேன்.
நன்றி ராகவன்
எந்த விளக்கமும் தேவைபடாத எல்லோருக்கும் புரியும்படியான கவிதைகளுக்கு என்றுமே மவுசு அதிகம் தான். ஒருவனின் பயத்தை அழகுத்தமிழில் அவர் சொல்லியிருக்கும் விதம் மெச்சும்படி இருக்கிறது.
உங்களுக்காக அவரின் கவிதையை இங்கே பகிர்கிறேன்.
பழுதான பாலம்
பழுதான பாலம் என்று
தான் தோன்றுகிறது
அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா
என்று தெரியவில்லை
பழுதான பாலம் என்று
தான் தோன்றுகிறது
அப்புறத்திற்கு கொண்டு சேர்க்குமா
என்று தெரியவில்லை
கடக்காமலே பார்த்துக் கொண்டிருந்ததில்
எதிரில் ஒருவர் கடந்து கொண்டிருந்தார்
விரைந்து கடந்தால் இருவரை
தாங்குமா என்று சந்தேகம் வந்த்து
கொஞ்சம் காத்திருந்தேன்
ஏதோ பேசிக் கொண்டே வந்தஇரண்டு பேர்கள் கடக்க
ஆரம்பித்தார்கள்
நானும் சேர்ந்து கொண்டால்
பிடித்திருக்கும் கயிறுகள் அறுபடலாம்
அல்லது பாலத்தின் பலகைகள் முறியலாம்
மறுபடி காத்திருந்தேன்
அவர்கள் என்னை வேடிக்கையாய்
பார்த்து கடந்து சென்றார்கள்
இப்போது பாலத்தில் யாருமில்லை
தனியாய் கடக்க தயக்கமாய் இருந்தது
திரும்பவும் ஊருக்குள் நகர்ந்து
வேற்று வழி இருக்கா என்று
விசாரிக்க ஆரம்பித்தேன்.
ராகவனின் இன்னும் சில கவிதைகளை கூடல் கூத்தன் என்னும் வலைத்தளத்தில் வாசிக்கலாம்.
0 comments :
Post a Comment