கண்முன்னே கரைகிறது என்னுயிர்!!




சிகரெட்டிலிருந்து கசியும் புகையினூடே

என் உயிரும் மெதுவாய் கரைந்தழிகிறது

அம்மாவின் மீது சத்தியம் செய்தும் கூட

அடுத்த இரு நாட்களில் அழகாய் வந்தமர்கிறது என் விரலிடுக்கில் ...

நுரையீரல் சென்று திரும்பும் புகையோடு

வாழ்வின் மிச்சமும் கண்முன்னே வளைந்து நெளிந்து நகர்ந்து மறைகிறது

இதுவே கடைசி என்று நான் எறியும் மீதம்

நசுங்கிச்சாகிறது என் காலடியில் தினமும் ....

-- பா.பாலகுமார்

0 comments :

Post a Comment